×

‘வரிப்பகிர்வு குறித்த கருத்து வாழைப்பழம் காமெடி போல உள்ளது’: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு எழுந்த விமர்சனம்!!

சென்னை: செலுத்தும் வரியை விட தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி கொடுப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில் அவர் தவறான கருத்தை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்;

2014- 2023 மார்ச் வரை தமிழகத்திடம் ஒன்றிய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. தமிழ்நாடு அரசிடம் இருந்து வந்த வரியை விட ஒன்றிய அரசு அளித்த தொகை அதிகம் என அவர் கூறியுள்ளார். 2014 – 15ம் ஆண்டில் இருந்து 2023 – 24ம் நிதியாண்டு வரை தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து அளிக்கப்பட வரி வகையில் ரூ.2.88 லட்சம் கோடியும், மானியமாக ரூ.2.58 லட்சம் கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீண்டகால மூலதன செலவுக்கு ரூ.6,412 கோடி வழங்கப்பட்டது. மொத்தமாக தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி ரூ. 6.96 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட 3 தொகையையும் கூட்டினால் ரூ.5.53 லட்சம் கோடி மேட்டுமே வருதாகவும், சுமார் ரூ.1.50 லட்சம் கோடி கூடுதலாக கொடுத்தது போல் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்; தமிழ்நாட்டில் இருந்து பெறும் ஒரு ரூபாய் வரிக்கு 40 காசுகள் மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி அளிப்பதாகவும், மறைமுக வரி மூலம் வசூல் ஆகும் தொகையை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.

வரி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை பலமுறை எடுத்துக்காட்டுகளுடன் எடுத்து சொல்லியும் ஒன்றிய அரசு கேட்பதில்லை என அரசியல் விமர்சகர் சத்தியன் விமர்சித்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசி கொண்டிருக்கும் போதே நிவாரண நிதி கிடைக்கவில்லை என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்களுக்கு நிவாரண நிதி கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் கூடியபோது எங்கே கிடைக்கிறது என பெண் எதிர்கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெண் கேள்வி எழுப்பிய நிலையில் வாய்ப்புக்கு நன்றி என கூறி நிர்மலா சீதாராமன் பேச்சை நிறைவு செய்தார்.

 

The post ‘வரிப்பகிர்வு குறித்த கருத்து வாழைப்பழம் காமெடி போல உள்ளது’: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு எழுந்த விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nirmala Sitharaman ,CHENNAI ,Union Finance Minister ,Tamil Nadu ,Kodambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ்...